இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆஜரானார். எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களைத் திரட்டுவதற்காக அரசுத் தரப்பு கூடுதல் கால அவகாசம் கோரியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்கி, வழக்கை எதிர்வரும் நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக மொத்தம் RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாகச் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் சரவணன் மறுத்து, விசாரணையைக் கோரியுள்ளார். கடந்த வாரம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), டத்தோஸ்ரீ எம். சரவணன், அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் 12 வயது மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களை அறிவிக்குமாறு கோரியிருந்தது.
இதற்குத் தேவையான விளக்கங்கள் மற்றும் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க தாம் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்திருந்தார். admin- SabthamsTV.